விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அக்டோபர் 1ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி தற்பொழுது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

பல புதிய மாற்றங்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சண்டைக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க முடியாது என்று கூறி ஸ்ட்ரைக் செய்தனர். இதனால் பிக் பாஸ் வீட்டினருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் கமலஹாசன் save செய்யப்பட்டவர்கள் எனக்கூறி, நீங்க ரொம்ப ஆர்வமா இருக்குறதால , பிரதீப் நீங்க save எனக் கூறுகிறார். இதற்கு உடனே பொதுமக்கள் கைதட்ட, அவர்களை பாத்து கமலஹாசன் ‘என்னங்க நீங்க இப்படி பன்னிட்டீங்க?’ என கேட்கிறார். மேலும் மாயாவை பார்த்து ‘மாயா’ என கூப்பிட, அவர் ‘ஆமா சார்’ என மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.

இதொத்தொடர்ந்து பேசிய கமலஹாசன் ‘ பிரதீப் கு மட்டும் ஜனங்க கைதட்யாருக்காவது ஞாபகம் இருக்கா இங்க’ என பொதுமக்களை பார்த்து கேட்கிறார். மேலும் அப்புறம் எப்படி நீங்க இப்படி தட்டலாம்’ என தனக்கே உரிய நக்கல் பாணியில் கேட்டு அனைவர் முன்னிலையிலும் மாயாவிற்கு செம பல்பு கொடுக்கிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…
