மாலத்தீவில் கிளுகிளுப்பாக பிறந்தநாளை கொண்டாடிய விஜய் பட நடிகை… வெளியான புகைப்படங்கள்…

By Begam on ஐப்பசி 15, 2023

Spread the love

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் தான் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். மாடல் அழகியான நடிகை பூஜா ஹெக்டேவை ‘முகமூடி’ திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் அறிமுகப்படுத்தினார்.

   

இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி வந்தார். தெலுங்கு சினிமா இவருக்கு கை கொடுத்தது. இதை தொடர்ந்து சூப்பர் ஹிட் நடிகையாக வலம் வந்தார்.

   

 

தற்பொழுது தெலுங்கு ,தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் துலு நாட்டின் உடுப்பி  மாவட்டத்தை சேர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பூஜா ஹெக்டே. இவருக்கு 22 பில்லியனுக்கும் அதிகமான போல்லோவர்ஸ்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர்.

தொடர்ந்து நான்கு பெரிய தோல்வி படங்களை கொடுத்த நிலையில், சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகியுள்ளார். அல்லு அர்ஜுனுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த ‘அலா வைகுந்த புறமுலோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் தமிழில் நடிகர் விஜயுடன் பீஸ்ட் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். இத்திரைப்படம் விஜயின் கேரியரில் மோசமான விமர்சனங்களை பெற்ற படங்களில் ஒன்றாக மாறியது.

இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே தோல்வியையே தழுவியது. தனது அடுத்த படத்தை இன்னும் ஆரம்பிக்காத நிலையில், தனது ஓய்வு நேரத்தை மாலத்தீவில் கழித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது தனது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடியுள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஒன்று ‘சாமி,  இனிமேலாவது நான் நடிக்கிற படமெல்லாம் ஹிட்டாகணும் என்று வேண்டுவது போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.