விஷாலுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படியொரு கிப்ட் கொடுத்த யோகி பாபு… திடீர்னு என்ன இப்படியொரு பாசம்…?

By Begam on ஐப்பசி 13, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

   

இதைத்தொடர்ந்து சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஹரி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். விஷால் 34 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

   

 

இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், காரைக்குடி படப்பிடிப்பின் போது நடிகர் யோகிபாபு, முருகர் சிலை ஒன்றை வாங்கி விஷாலுக்கு பரிசளித்துள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் விஷால் தனது இன்ஸ்டா பகிர்ந்துள்ளார். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Vishal (@actorvishalofficial)