விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அக்டோபர் 1ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி தற்பொழுது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுவர் நடிகை விசித்ரா. இவர் அவ்வப்பொழுது சர்ச்சைகளில் சிக்கிய வண்ணமே உள்ளார்.
இவரைப்பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. இவர் 90களில் காமெடி நடிகர் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ன பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் . வெள்ளி திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர். இவர் நடிப்பில் முதலில் வெளியான படம் ‘ஜாதிமல்லி’. இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் இப்படம் வெளியானது.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே சீரியலிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ படத்தில் இவர் நடித்த ரதிதேவி என்கிற கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார்.2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் சினிமா துறைக்கு குட் பாய் கூறினார். தம்பதியினருக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் நடிகை விசித்ரா குடும்பமாக தன்னை பற்றியும், குடும்பத்தை பற்றியும் பேசிய introduction வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.