Connect with us

CINEMA

‘ஜெயிலர் வசூலை லியோ தாண்டாது. அப்படி நடந்தால் இனி மீசை வைக்க மாட்டேன்’… ட்வீட் போட்டு மீண்டும் விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்…!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியுடன் நடிகை திரிஷா நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படம், ‘லியோ’. இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்க , செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

   

இத்திரைப்படம்  வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு தடைகளை தாண்டி நேற்று லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுவதாக கூறப்பட்டிருந்தது. அதன்படி லியோ திரைப்படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கிறது. ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு கோடி பார்வையாளர்கள் இந்த படத்தின் டிரைலரை பார்த்தனர். தற்போது லியோ திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியை துபாயில் வரும் அக்டோபர் 12ஆம் தேதி நடந்த பட குழு திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டு, இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சினிமா விமர்சகர் என்ற பெயரில் தேவையில்லாமல் டாப் நடிகர்களை வம்பிழுப்பதையே வேலையாக வைத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.  இவர் அவ்வப்பொழுது விஜய்யை சீண்டி வருகிறார். சமீபத்தில் கூட ட்ரைலரை வைத்து மிகப்பெரிய பிரச்சனையை கிளப்பினார். தற்பொழுது மீசை ராஜா ‘ஜெயிலர் வசூலை லியோ தாண்டாது. அப்படி நடந்தால் இனி மீசை வைக்க மாட்டேன்’ என ஏற்கனவே கூறியிருந்த வீடியோவை தற்பொழுது ட்வீட் செய்து தளபதி ரசிகர்களை வம்புக்கு இழுத்துள்ளார். இதற்கு அவர்களும் கமெண்ட் பக்கத்தில் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். இதோ அந்த ட்வீட்…

author avatar
Continue Reading

More in CINEMA

To Top