Connect with us

CINEMA

‘எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க…’ விஜய், லோகேஷ் கனகராஜ் சண்டையில் சிக்கிய விக்கி… தளபதி ரசிகர்களிடம் கேட்ட பகிரங்கமான மன்னிப்பு..

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை 6 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இதைத் தொடர்ந்து எழுந்த பல சர்ச்சைகளுக்கும், பல கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இந்த தம்பதியினர்.

   

தற்பொழுது இவர்கள் தங்களது குழந்தையுடன் மகிழ்வான வாழ்வை வாழ்ந்து கொண்டுள்ளனர். நடிகை நயன்தாராவின் ஜவான் திரைப்படம் தற்பொழுது ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். சமீபத்தில் இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – நடிகர் விஜய் இடையே மனக்கசப்பு இருப்பது தொடர்பான பதிவுக்கு லைக் செய்திருந்தார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் கொந்தளிக்கத் தொடங்கி விட்டனர்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘விஜய் மற்றும் லோகேஷ் சம்பந்தப்பட்ட வீடியோவில் என்ன பேசப்பட்டது என்பதை பார்க்காமல் வீடியோவை லைக் செய்து விட்டேன். நான் லோகேஷ் கனகராஜின் மிகப்பெரிய ரசிகன் என்பதால் அதை செய்தேன். அது என்னுடைய மோசமான நேரம். உணர்ச்சிவசப்பட்டு லைக் செய்து விட்டேன். இதனால் உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top