‘என் தாத்தா முதலமைச்சர்.. ஸ்கூல் படிக்கும் போதே என்னை கட்டாயப்படுத்தி அஜித் படத்துல நடிக்க வைச்சாங்க’… அஜித் பட நடிகையின் பகீர் பேட்டி…!

By Begam on ஐப்பசி 10, 2023

Spread the love

தமிழில் தல அஜித்குமாருடன் ‘காதல் மன்னன்’ படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை மானு. அந்த படத்தில் வரும் ‘உன்னை பார்த்த பின்பு நான்’ பாடல் மிகவும் பிரபலமானது. அதில் ‘மணமகளாய் உன்னை பார்த்த பின்னும் சிறையெடுக்க மணம் துடிக்குதடி” என மானுவை பார்த்து உருகி பாடுவார் அஜித். அந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்ற நடிகை மானு அடுத்து எந்த படத்திலும் நடிக்காமல் ஆளே காணாமல் போய்விட்டார். நடிகர் அஜித் உடன் காதல் மன்னன் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை மானுவுக்கு வெறும் 16 வயது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்ற போது அடுத்தடுத்த அவருக்கு பட வாய்ப்புகள் வந்த போதும் அவர் நடிக்கவில்லை. அவர் அப்பொழுது உலகம் முழுவதும் பரதநாட்டிய டூர் சென்றதால் நடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காதல் மன்னன் திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற திரைப்படத்தில் மட்டும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மானு.

   

 

தற்பொழுது நடிகை மானு திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரிலேயே செட்டில் ஆகிவிட்டார்.தனது குடும்பத்துடன் அங்கே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டுள்ளார். அவர் சிங்கப்பூரில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.  இந்நிலையில், காதல் மன்னன் படத்தில் தன்னை வற்புறுத்தி தான் ஹீரோயினாக நடிக்க வைத்தார்கள் என நடிகை மானு கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது ‘எனது குடும்பத்தில் யாரும் சினிமாவில் இருந்ததில்லை. என் குடும்பத்தினர் பெரும்பாலானோர் டாக்டர்கள் தான். என்னுடைய தாத்தா கோபிநாத் பர்டோலால், அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

நான் படிப்பதற்காக தான் சென்னைக்கு வந்தேன். ஸ்கூல் படிக்கும்போதே விவேக்கும், சரணும் என்னை கட்டாயப்படுத்தி காதல் மன்னன் படத்தில் நடிக்க வைத்தார்கள். அந்த படத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்தினேன். பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டேன். என் கணவரும் டாக்டராக தான் உள்ளார்’ என நடிகை மானு கூறி உள்ளார்.