என்னது..! நயன்தாராவின் திருமண உடை இவ்வளவு விலையா..? வியப்பில் ரசிகர்கள்..!!

By admin on ஐப்பசி 7, 2023

Spread the love

நாம் சினிமாவில் பார்த்து கொண்டாடிய ஹீரோயின்களுக்கு திருமணம் என்றால் ரசிகர்கள் அந்த நாளுக்காக ஆவலுடன் காத்து கொண்டிருப்பார்கள். அப்படி பல்வேறு நடிகைகளின் திருமண புகைப்படங்கள் வெளியாகி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் நடிகைகளின் திருமணம் என்றாலே பிரம்மாண்டமான உடை, அணிகலன், திருமண கொண்டாட்டம், சாப்பாடு என எதற்கும் பஞ்சம் இருக்காது.

   

இந்நிலையில் 6 வருடங்களாக காதலித்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன் நயன்தாரா போட்டோக்கள் பதிக்கப்பட்ட வாட்டர் பாட்டில்கள், தமிழக மற்றும் கேரளா உணவு வகைகள், பிரம்மாண்ட வரவேற்பு என திருமணத்திற்கு வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பல்வேறு விஷயங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

   

 

 

இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணத்தின்போது அணிந்திருந்த உடைகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண போட்டோக்கள் இணையதளத்தில் வெளியானவுடன் நயன்தாரா போலவே மேக்கப் செய்து கொண்டு பலரும் ரிலீஸ் செய்த செய்ய ஆரம்பித்தனர். முழுக்க எம்ராய்டிங் செய்யப்பட்ட உடைகளை நயன்தாரா அணிந்திருந்தார். அதன் விலை 25 லட்சம் என கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்டதும் ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.