விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் ஆறு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீடு இந்த சீசனில் இரண்டாக பிரிந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை விட வெளியில் இருக்கும் போட்டியாளர்களுக்கு அதிகமான கண்டிஷன் போடப்பட்டுள்ளது.
இந்த சீசனில் விசித்ரா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, வினுஷா, அனன்யா ராவ், ரவீனா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவணன் விக்ரம், ஐஷு, விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், ஜோவிகா, மணி சந்திரா, பூர்ணிமா, மாயா அக்ஷயா உதயகுமார் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றைய ப்ரோமோ வெளியானது. அதில் கமல்ஹாசன் ஜோவிகாவிடம் விசித்ராவின் நோக்கம் தப்பில்லை. இது ஒரு ஜெனரேஷன் இடைவெளி. குறைகளை சொல்லும் போது உடனே ஏற்றுக் கொள்கிற மனம் பலருக்கு இருக்காது. கற்றல் விதி இருக்கலாம் தவிர, கற்றல் வதை இருக்கக் கூடாது என பேசியுள்ளார். அந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.