ரோபோ ஷங்கர் மகளுக்கு விரைவில் டும் டும் டும்…! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கமலஹாசன் வரை அழைக்கப்பட்ட பிரபலங்கள்..

By Begam on புரட்டாதி 29, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகளான இந்திரஜா சங்கர் தற்பொழுது திரையுலகில் நடிகையாக கால் பதித்து கலக்கி வருகிறார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பிகில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். இத்திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

இத்திரைப்படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாக நடிகை இந்திரஜா நடித்து கலக்கினார். இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.  நடிகை இந்திரஜா டாக்டர் கார்த்திக் என்பவரை காதலித்து வருகிறார். இருவருக்கும் திருமணம் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அழைப்பிதழ்கள் கொடுக்கும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

   

 

இதன் முதல்படியாக குடும்பத்துடன் சென்று முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு திருமணம் அழைப்பிதழ் கொடுத்து இருக்கிறார் ரோபோ ஷ்ங்கர். இந்த புகைப்படங்களை இந்திரஜா, தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். இதுப்போக வெள்ளித்திரை பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என அனைவருக்கும் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இந்திரஜாவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.