ஒரே அட்ரஸ்,… 93 ஓட்டுக்கள்…! வரைவு வாக்காளர் பட்டியலில் அம்பலமான குளறுபடி…. அதிர்ச்சியில் மக்கள்…!!

By Devi Ramu on மார்கழி 31, 2025

Spread the love

தேனி மாவட்டம் போடியில், ஒரே வீட்டின் முகவரியில் 93 பேருக்கு வாக்குகள் இருப்பதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், முந்தல் கிராமத்தைச் சேர்ந்த 93 பேருக்கு ஒரே வீட்டு முகவரி பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, ‘SIR’ சரிபார்ப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வீட்டு எண்ணிற்கு பதிலாக வார்டு எண் தவறுதலாகப் பதிவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, படிவம் எட்டைப் பயன்படுத்தி அந்தத் தவறுகளைத் திருத்தும் பணியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.