தமிழ் சினிமாவில் 90களில் டீச்சர் என்றால் ரசிகர்களை நினைவுக்கு வருவது ரேகா தான். சத்யராஜ் நடிப்பில் வெளியான கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தில் ஜெனிஃபர் டீச்சராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். காவலன் அவன் கோவலன் மற்றும் புன்னகை மன்னன் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போதும் தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இறுதியாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் அம்மாவாக நடித்திருந்தார்.
நடிகை ரேகா கடந்த 1996 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் ரேகா ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் நடிகை ரேகா சமீபத்தில் அளித்த பேட்டியில், என்ன பத்தி யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை.
இவ்வளவு வயசுலயும் இப்படி மினிகிட்டு திரியுற பாரு என நிறைய பேர் பேசுவாங்க. நான் ஒன்னும் அவங்களோட பணத்துல எதுவும் பண்ணல. என்கிட்ட பணம் இருக்கு நான் மினிக்கிக்கிறேன். மூஞ்சில பாரு அவ்வளவு பவுடர் இருக்கு என பேசுவாங்க. நல்ல பவுடர் போட்டு கண்ணுக்கு மை வச்சு சின்னதா ஒரு தோடு போட்டு அழகா புடவை கட்டினால் பார்க்க லட்சணமா இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் இருக்கவங்க வியூஸ் அதிகமா வர வேண்டும் என்பதற்காக மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுக் கொண்டு கண்ட மேனிக்கு வீடியோக்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்வது மட்டுமல்லாமல் குழந்தைகளையும் அதை பண்ணை என்று செய்து ரீல்ஸ் போட சொல்லி துன்புறுத்துகிறார்கள். இன்றைய தலைமுறை மிகவும் மோசமாகிவிட்டது என்று ரேகா சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.