தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வரும் சீமான் முதலில் திரைத்துறையில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்தார். இவருடைய நடிப்பில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் மற்றும் பள்ளிக்கூடம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனிடையே சீமான் இயக்கிய ஐந்து சூப்பர் ஹிட் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பாஞ்சாலங்குறிச்சி:
1996 ஆம் பிரபு மற்றும் மதுபாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் சீமான் இயக்கிய முதல் படமான பாஞ்சாலங்குறிச்சி திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் நடிகர் பிரபுவிற்கு மற்றொரு சின்ன தம்பி திரைப்படம் என்று சொல்லும் அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்றது. தேவா இசையில் வெளியான அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் பறந்து கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.

இனியவளே:
கடந்த 1998 ஆம் ஆண்டு மீண்டும் பிரபுவின் கூட்டணியில் இயக்கிய திரைப்படம் தான் இனியவளே. இந்த திரைப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக சுவலட்சுமி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் கதை புதிதாக இல்லாததால் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து நடிகர் பிரபுவுக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது.

வீரநடை:
நடிகர் சத்யராஜ் மற்றும் குஷ்பூ உள்ளிட்டோ நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வீரநடை. ஆக்சன் மற்றும் காமெடி என இந்த திரைப்படத்தின் காட்சிகள் அமைந்திருந்த நிலையில் படம் பெரிய அளவில் சீமானுக்கு கை கொடுக்கவில்லை. பெரிய கருப்பன் கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தம்பி:
சுமார் ஆறு வருடம் கழித்து நடிகர் மாதவன் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தம்பி. தமிழ் சினிமாவின் வித்தியாசமான திரைப்படமாக அமைந்தது. ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே பிரதானமாக இருந்த நிலையில் சீமான் எழுதிய படத்தின் வசனமும் தூள் பறந்தது. சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவனை ஆக்சன் நடிகராக நடிக்க வைத்து சீமான் அழகு பார்த்தார். இந்தத் திரைப்படத்தின் சிறந்த வசனத்திற்காக தமிழ்நாடு மாநில விருது சீமானுக்கு வழங்கப்பட்டது.
![]()
வாழ்த்துக்கள்:
மீண்டும் மாதவனுடன் இணைந்து சீமான் இயக்கி இருந்த திரைப்படம் தான் வாழ்த்துக்கள். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவிலேயே இந்த படத்தில் தான் ஆங்கில வார்த்தைகள் எதுவும் இல்லாத திரைப்படமாக சீமான் இயக்கினார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்த நிலையில் இதுவே சீமான இயக்கிய கடைசி படமாகும்.
