Connect with us

CINEMA

ரஜினி, கமலுடன் கலக்கிய 80’ஸ் அழகு தேவதை நடிகை ரதி இப்ப எப்படி இருகாங்க தெரியுமா..? ஆள் அடையாளமே தெரியலையே…

80’ஸ் 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை ரதி. இவர் தனது 16 வயதிலேயே, 1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புதிய வார்ப்புகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.. நடிகை ரதி உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவ.ர் தனது பத்து வயதில் இருந்தே மாடலிங் துறையில் ஈடுபட்ட வந்த இவர் தனது பள்ளி படிப்பை சென்னையில் முடித்தார்.

   

பள்ளி காலத்திலேயே அனைத்து பள்ளி நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ,விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து அசத்தியவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தம்பிக்கு எந்த ஊரு, நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை, கழுகு போன்ற படங்கள் அந்த காலத்திலேயே பெரும் வசூல் சாதனை படைத்தது. தமிழ், தெலுங்கு, இந்தி என மொத்தம் 120 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தற்பொழுது வரை பாலிவுட் திரையுலகில் தனது நடிப்பையும் தொடர்ந்து வருகிறார் நடிகை ரதி.   இவர்  திரைப்படங்களில் மட்டுமின்றி ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும்  நடித்துள்ளார்.

நடிகை ரதி 1985 இல் தொழிலதிபர் அனில் விர்வானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்மதிக்கு தனுஜ் விர்வானிஎன்ற மகனும் உள்ளார். தற்பொழுது இவர் தனது மகனுடன்  இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ‘ நடிகை ரதியா இது?’ என ஆச்சரியமாக கேள்வி வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top