“அம்மா அந்த சித்தப்பா என்னை..” 8 வயது சிறுமியை கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று…! விளையாட சென்ற போது அரங்கேறிய கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில புரோக்கர் வேலை பார்த்து வரும் இவருக்குத் திருமணமாகி மனைவியும், மனவளர்ச்சி குன்றிய 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதியில் வசித்து வரும் அவரது உறவினரின் 8 வயது மகளான 3-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, பால்பாண்டியைச் சொந்தச் சித்தப்பா என்ற முறையில் நம்பி பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல் பால்பாண்டியின் வீட்டிற்கு விளையாடச் சென்ற 8 வயது சிறுமியை, அந்த காமாந்தகன் தனது வீட்டிலிருந்த கார் பார்க்கிங் பகுதிக்கு அழைத்துச் சென்று மடியில் அமரவைத்து கொடூரமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி வந்து, தனது தாயிடம் அழுது கொண்டே நடந்த கொடுமையைக் கூறியுள்ளார்.

   

சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார், பால்பாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவனைக் கைது செய்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காமக் கொடூரன் பால்பாண்டி, நீதிமன்ற உத்தரவின்படி விருதுநகர் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டான்.