அசாம் மாநிலத்தில் கிசாரி பதர் என்ற கிராமத்தை சேர்ந்த எட்டு வயது சிறுமி நேற்று காலை கிராமத்திற்கு அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் தேயிலை தோட்டத்தில் தேடிப்பார்த்து சிறுமி கிடைக்காததால் உடனே போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தேயிலை தோட்டத்தில் சிறுமியை தேடிய நிலையில் இரவு 9 மணி அளவில் சிறுமியை சடலமாக கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து விசாரணையை தீவிர படுத்திய போலீசார் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டறிந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது அதே பகுதியை சேர்ந்த ஜிதன் லோகர் (45) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தாயை கொலை செய்த வழக்கில் அவர் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விடுதலையானது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
