8 வயது சிறுமி எங்கே?… சிசிடிவியில் சிக்கியதா க்ளூ?… துர்கா பூஜைக்குச் சென்ற தாய்… 3 நாட்களாகத் தொடரும் மர்மம்… தீவிர தேடுதல் வேட்டை…!!

By Gayathri on ஐப்பசி 20, 2026

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் மற்றும் 8 வயது மகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கருமாங்கழனி பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் துர்கா பூஜை திருவிழாவிற்காக அவர் தனது சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், சிறுமி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி நெடுஞ்சாலைப் பகுதிக்குத் தனியாகச் சென்ற அச்சிறுமி, எதிர்பாராதவிதமாக அங்கிருந்து மாயமானார். நெடுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாகத் தேடியும் சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

   

இதையடுத்து, சிறுமியின் தாத்தா, பாட்டி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பதிவு செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாயமான சிறுமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தாத்தா பாட்டியுடன் தங்கியிருந்த வடமாநிலச் சிறுமி திடீரென மாயமான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.