“எனக்கு நிறைய பணம் வேணும்”… மனைவியை மிரட்ட 8 மாத குழந்தையை தலைகீழாக தூக்கிச் சென்ற தந்தை… பகீர் கிளப்பும் வீடியோ..!

By Nanthini on ஆடி 26, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்கூர் மாவட்டத்தில் வசித்து வரும் சஞ்சு என்பவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதிக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம் மற்றும் கார் வேண்டும் என்று கேட்டு சஞ்சு தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். சஞ்சு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இப்படியான நிலையில் வரதட்சணை கேட்டு தன்னுடைய மனைவியை மிரட்டுவதற்காக பிறந்து எட்டு மாதங்களை ஆன தன்னுடைய குழந்தையை தலைகீழாக பிடித்து தூக்கியபடி சஞ்சு வீதியில் நடந்து சென்றார்.

இதனைப் பார்த்த ஊர் மக்கள் இது தொடர்பாக கேட்டபோது தனக்கு பணம் வேண்டும் எனவும் இதை வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் பகிரங்கமாக கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் சஞ்சு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேசமயம் சஞ்சுவின் குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தையின் இடுப்பு மற்றும் எலும்பு இடம்பெயர்ந்து உள்ளதாகவும் அவருடைய மனைவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.