மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆவடை தங்கம் நாடார் தெருவில் விநாயக் மற்றும் கண்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த நாளன்று உயிரிழந்துவிட்டது. இப்படியான நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 8 மாதங்களுக்கு முன்பு கண்மணிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் உசிலம்பட்டிக்கு சென்று விட்டார். இதனிடையே நேற்று குழந்தைக்கு கண்மணி தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கண்மணி மற்றும் குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக தகவல் அடைந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
