BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி…. சற்றுமுன் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், இந்த ஆலையின் உரிமம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்த போதிலும், விதிமுறைகளை மீறி இது தொடர்ந்து இயங்கி வந்தது முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமாக தெரியவந்துள்ளது.