கோவையில் நள்ளிரவில் தோண்டப்பட்ட குழி.. வெளிவந்த ஏழாம் வகுப்பு மாணவனின் சடலம்… குழிதோண்டி புதைத்த ஏழாம் வகுப்பு மாணவர்கள்… திடுக்கிடும் சம்பவம்…!

Spread the love

கோவையில் கோடை விடுமுறையில் நண்பர்களுடன் விளையாடச் சென்ற 13 வயது பள்ளி மாணவன், சக நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட திடுக்கிடும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் இருகூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரின் 13 வயது மகன் தாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஆர்.ஜி. புதூர் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 15ஆம் தேதி பிற்பகலில், கோடை விடுமுறை என்பதால் தனது இரு நண்பர்களுடன் இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளான்.

இரவு நீண்ட நேரமாகியும் சிறுவன் தாஸ் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், தாஸுடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தபோது, “அவன் யாரோ ஒரு மர்ம நபருடன் தனியாகச் சென்றான்” என்று கூறி மழுப்பியுள்ளனர். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அவசரப் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனுடன் கடைசியாகச் சென்ற இரு நண்பர்களையும் சந்தேகத்தின் அடிப்படையில் தனியாக அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிறுவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த இரண்டு சிறுவர்கள், அங்கு கிடந்த காலி மதுபாட்டிலால் தாஸின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் பயந்துபோன அச்சிறுவர்கள், மாட்டி கொள்ளக் கூடாது என்பதற்காக தாஸின் உடலை அங்கேயே ரகசியமாக குழி தோண்டி புதைத்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்குத் திரும்பியது அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, விசாரணையில் சிறுவர்கள் காட்டிய அடையாளத்தின்படி மே 18 அன்று காலை சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, புதைக்கப்பட்ட மாணவன் தாஸின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக உடல் கோவை இ.எஸ்.ஐ. (ESI) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களைக் கைது செய்து கொலைக்கான உண்மையான பின்னணி குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்களுக்கிடையேயான வாக்குவாதத்தில் 13 வயது மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

2 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

24 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

9 மணத்தியாலங்கள் ago