தமிழ் திரையுலகில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜெயம். இந்த படத்தை பிரபல இயக்குனர் மோகன்ராஜ் இயக்கி இருந்த நிலையில் ஹீரோவாக ரவி நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு தான் அவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார். இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இதில் முக்கிய காமெடி ரோலில் நடித்து பிரபலமானவர்தான் சுமன் செட்டி. இவர் அலிபாபா என்ற கேரக்டரில் அந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

இதுதான் சுமன் செட்டி தமிழ் திரை உலகில் அறிமுகமான முதல் படமாகும். இதனைத் தொடர்ந்து யங் சூப்பர் ஸ்டார், குத்து, ரவி கிருஷ்ணாவின் 7ஜி ரெயின்போ காலனி, கேடி, மண்ணின் மைந்தன், பிப்ரவரி 14, சண்டக்கோழி, தோரணை, வரலாறு, படிக்காதவன் என அடுத்தடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இந்த அனைத்து படங்களிலுமே இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த கலக்கி இருந்தார்.

இறுதியாக இவர் தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த விளம்பரம் என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு இவர் பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு திரை உலகிலும் சுமன் செட்டி பிரபல காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

தற்போதும் இவர் தெலுங்கு திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கின்றார். கடந்த 2009ஆம் ஆண்டு நாக பவானி என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகர் சுமன் ஷெட்டி, இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இப்படியான நிலையில் சுமன் செட்டி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படத்தை அவர் instagram பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
