ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சி… மூன்றே மாதத்தில் 766 விவசாயிகள் தற்கொலை… வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்…!

By Nanthini on மார்கழி 12, 2025

Spread the love

இந்தியாவில் பெரும்பாலான விவசாயிகள் தற்கொலை என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகம் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் விவசாயிகள் தற்கொலை புள்ளி விவரங்கள் குறித்த கேள்விக்கு மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் அளித்த பதில் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. அதாவது மாநிலங்களவை பூஜ்ஜிய நேரத்தின் போது, மராட்டிய மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 766 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகள் எப்போது அரசுக்கு அன்பானவர்களாக மாறுகிறார்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில் மராட்டியம் மாநிலம் நாட்டிலேயே முன்னிலை வகிப்பதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த மகசூல், கடன் மற்றும் போதுமான நீர் பாசன வசதிகள் இல்லாததால் விவசாயிகள் இத்தகைய முடிவை எடுப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. மக்களை காக்கக்கூடிய விவசாயிகள் தற்கொலை என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.