மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐஓபி வங்கி கிளைகளில் இந்த அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 35 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது ஒரு தற்காலிக பயிற்சிப் பணி மட்டுமே என்பதால், பயிற்சி காலம் முடிந்த பிறகு நிரந்தர வேலை வழங்கப்பட மாட்டாது என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறிப்பாக, பட்டப்படிப்பு முடிவுகள் 31.07.2026 அன்று அல்லது அதற்கு முன்பாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், 01.03.2022 முதல் 31.07.2026 வரையிலான காலகட்டத்திற்குள் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.
வயது வரம்பைப் பொறுத்தவரை, 01.07.2026 தேதியின்படி கணக்கிடப்படும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். வழக்கம்போல் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அவர்கள் பணியமர்த்தப்படும் நகரங்களின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி, மெட்ரோ நகரங்களுக்கு மாதம் ரூ.15,500, நகர்ப்புறங்களுக்கு ரூ.14,500 மற்றும் கிராமப்புறங்களுக்கு ரூ.14,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கு ரூ.744, பெண்களுக்கு ரூ.708 மற்றும் எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.236 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும்.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் NATS அல்லது NAPS இணையதளப் பக்கத்தில் தங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும். அதன் பிறகே வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் போது ஏதேனும் ஒரு மாநிலத்தை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்பதால், சொந்த மாநிலத்தைத் தேர்வு செய்வது சிறந்தது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விண்ணப்பிக்கக் கடைசி நாள் 20.07.2026 ஆகும். எனவே, தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து மகிழுங்கள்.
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…