தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திமுகவிற்கும் இடையேயான வார்த்தைப்போர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக இதற்கு உடனடியாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.
விஜய்யின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட திமுக ஐடி விங், “மூன்றாந்தர வீதிப் பேச்சாளரைப் போலத் தரம் தாழ்ந்து பேசும் முதலமைச்சர் விஜய் இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்; அவருக்கு நாவடக்கம் தேவை, பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்” என காட்டமாகத் சாடியிருந்தது. தங்களின் தலைவரை ‘நாவடக்கம்’ தேவை எனக் குறிப்பிட்ட திமுகவின் இந்த விமர்சனம், தவெக தொண்டர்கள் மற்றும் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கு மிகக் கடுமையான மொழியில் தவெக ஐடி விங் தற்பொழுது பதிலடி கொடுத்துள்ளது. “அரசியல் மேடைகளில் அவதூறுகளை அள்ளி வீசுவது திமுகவிற்கே கைவந்த கலை என்றும், நாகரிகம் குறித்துத் தீயசக்தி திமுக வகுப்பெடுப்பது வாந்தி எடுப்பது போல அருவருப்பாக இருக்கிறது” என்றும் அவர்கள் சாடியுள்ளனர். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து திமுகவினர் மேடைகளில் பேசிய பழைய கொச்சையான பேச்சுகளையும், சொந்தக் கட்சி பெண் வேட்பாளரையே தரம் தாழ்த்திப் பேசிய சம்பவங்களையும் சுட்டிக்காட்டி, நாகரிகம் பற்றிப் பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்று தவெக கேள்வி எழுப்பியுள்ளது.
இறுதியாக, “உங்கள் அழுக்குகளை எல்லாம் தோண்டித் துருவி எடுத்து அம்பலப்படுத்த ஆரம்பித்தால், அரசியலில் நீங்கள் அசிங்கப்பட்டுப் போவீர்கள்; அத்தனைக்கும் ஆதாரத்தை விட்டுச் செல்வதுதான் உங்கள் வரலாறு” என தவெக ஐடி விங் எச்சரித்துள்ளது. திமுகவின் அசிங்கப் பேச்சு வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொன்னால், அவர்கள் அருவருப்பு அடைந்து திமுகவை அறவே ஒதுக்கித் தூக்கி எறிவார்கள் என்றும், எனவே “அடக்கி வாசியுங்கள், இல்லையேல் மக்கள் உங்களை அடக்குவார்கள்” என தவெக விடுத்துள்ள இந்த இறுதி எச்சரிக்கை, இரு கட்சிகளுக்கு இடையே சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பையும் கருத்து மோதலையும் உருவாக்கியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…