மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம் பார்ஷிதாக்ளி தாலுகாவில் உள்ள ஜாம்வாசு கிராமத்தில், நிலத் தகராறு காரணமாக வெள்ளிக்கிழமை அன்று ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் மீது பொலேரோ பிக்கப் வாகனத்தை மீண்டும் மீண்டும் ஏற்றி இறக்கியதில், வீட்டிற்குள் இருந்த சோனாபாய் மகாராம் ஜாதவ் என்ற 75 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்தத் தாக்குதலில் 2 முதல் 3 பேர் தீவிர காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பக்கட்டத் தகவல்களின்படி, நிலத் தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த பொலேரோ வாகனம் சுமார் நான்கு முதல் ஐந்து முறை வீட்டின் மீது மோதி ஏற்றி இறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
https://twitter.com/nextminutenews7/status/2098354626311709023/video/1
இந்த அதிர்ச்சி சம்பவத்தால் சம்பந்தப்பட்ட வீடு முற்றிலும் பலத்த சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது
