ஒடிசா மாநிலத்தில் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால், 73 வயது முதியவர் ஒருவர் உடைந்த காலோடு 150 கிலோமீட்டர் தூரம் முச்சக்கர வண்டியை மிதித்து அரசு மருத்துவமனைக்கு வந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
அரசு நடத்தும் எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இலவசச் சிகிச்சை பெறவே அவர் பெர்ஹாம்பூர் பகுதிக்கு இவ்வளவு தூரம் பயணம் செய்துள்ளார்.
வறுமையின் காரணமாகத் தனியாரிலோ அல்லது அருகிலுள்ள மருத்துவமனைகளிலோ சிகிச்சை பெற முடியாத சூழலில், கடுமையான வலிக்கு மத்தியிலும் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்து மருத்துவமனையை அடைந்துள்ளார்.
