நள்ளிரவில் நிர்வாணமாக வந்த நபர்… கணவர் கிடந்த கோலத்தால் அலறிய 70 வயது மூதாட்டி… அடுத்து நடந்த பயங்கரம்… கிருஷ்ணகிரியை உலுக்கிய கொடூரம்…!!

By Soundarya on பங்குனி 9, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஓபகாவலசை கிராமத்தில், நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் முதிய தம்பதியினரைத் தாக்கி, கொடூரச் செயலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியான கண்ணப்பன் (75) தனது வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு நிர்வாண நிலையில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரைத் திடீரெனக் கல்லால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கண்ணப்பனின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி சென்னம்மாள் (70) கதவைத் திறந்து வெளியே வந்தபோது, அந்த மர்ம நபர் அவரையும் வலுக்கட்டாயமாகப் பிடித்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தம்பதியினரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்ட கிராம மக்கள், அவர்களை உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி கண்ணப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது மனைவி சென்னம்மாள், மேல் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

   

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய அந்த கொடூரக் குற்றவாளியை விரைந்து பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அமைதியான கிராமப்புறப் பகுதியில் வயதான தம்பதியினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலும், பாலியல் அத்துமீறலும் அப்பகுதி மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வையும், கடும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.