“அப்பா, நீ செஞ்சது ரொம்ப தப்புப்பா…” ராவணனாக நடித்துள்ள யஷ்ஷை எச்சரித்த 7 வயது மகன்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!!

By Devi Ramu on ஐப்பசி 31, 2026

Spread the love

வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான ‘ராமாயணா’ திரைப்படத்தில் ராவணனாக நடித்துள்ள நடிகர் யஷ்ஷை, படத்தின் பிரீமியர் காட்சியைத் பார்த்த அவரது 7 வயது மகன் கண்டித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

நமித் மல்ஹோத்ரா மற்றும் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘ராமாயணா’ படத்தின் பிரத்யேக பிரீமியர் காட்சி லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டது. இதில் நடிகர் யஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு படத்தைப் பார்த்துள்ளார்.

   

அப்போது படம் குறித்து யஷ் பேட்டியளித்துக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட நடிகை சாய் பல்லவி, “அப்பா படத்தில் ஏன் பறவையை கொன்றீர்கள் என்று யஷ்ஷின் மகன் யதர்வ் கேள்வி எழுப்பினான். அது ராமாயணக் கதை, சினிமா என்று யஷ் சமாளித்தாலும், ‘சினிமாவாக இருந்தாலும் பறவையை கொல்வது ரொம்ப தப்புப்பா, இனிமேல் அப்படியொரு காட்சியில் நடிக்கக் கூட செய்யாதீங்க’ என்று அவன் தந்தையைக் கண்டித்தான்” எனப் பலரும் ரசிக்கும்படி அந்தச் சுவாரஸ்யமான தருணத்தைப் பகிர்ந்துள்ளார்.