நள்ளிரவில் தமிழகத்தை உலுக்கிய கொடூரம்… 7 வயது சிறுமியை மது போதையில் தூக்கிச் சென்ற இளைஞர்… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on மார்கழி 28, 2025

Spread the love

கரூர் குளித்தலை அருகே 7 வயது சிறுமியை மது போதையில் இருந்த இளைஞர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சரவணன் என்ற 23 வயது வாலிபர் மதுபான கடையில் மது குடிப்பதற்காக சென்று உள்ளார். மது குடித்துவிட்டு அதீத போதையில் வந்த அவர் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பைக்கில் வருமாறு கடத்திச் சென்றுள்ளார்.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணாமல் பெற்றோர்கள் சுமார் 2 மணி நேரமாக தேடிய நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சிறுமியை அதே இடத்தில் இறக்கிவிட சரவணன் வந்துள்ளார். அப்போது தான் சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அவரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தொகை மலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்..