ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், இந்த 7 மாடி கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இதன் காரணமாகப் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஜிஹெச்எம்சி கோரிக்கையின் அடிப்படையில் அந்த அபாயகரமான கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றியுள்ளனர்.
மேலும், இதற்கு அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் வசித்து வந்த சுமார் 20 குடும்பங்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அக்கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பிறகே பொதுமக்கள் மீண்டும் வசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறி கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி மக்களின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
