வங்கதேசத்தில் 18 நாள்களில் 6-வது இந்து அடித்து கொலை…. தொடரும் சோகம்….!

By Nanthini on தை 6, 2026

Spread the love

நம்முடைய அண்டை நாடான வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கடந்த வருடம் பொறுப்பேற்றது. அப்போது முதல் அந்த நாட்டில் இந்து மக்கள் மீது தொடர்ந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக இந்த தாக்குதல் கொடூரமாக மாறி உள்ளது. இந்துக்கள் மீதான இந்த வன்கொடுமைகளை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் யூனுஸ் கண்டும் காணாதது போல இருக்கின்றார்.

இந்நிலையில் வங்கதேசத்தில் நர்சிங்டி மாவட்டத்தில் மீண்டும் ஒரு இந்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். மளிகை கடை நடத்தி வரும் மணி சக்கரபர்த்தி என்பவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ரோட்டில் எழுத்து போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல நேற்று விதவை பெண் ஒருவர் இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு மரத்தில் கட்டி வைத்து தலைமுடி அறுக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. கடந்த 18 நாட்களில் மட்டும் ஆறு இந்துக்கள் இப்படி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.