ஹோட்டலில் 21 பேர் கருகி சாம்பலான கொடூரம்… இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 65 உயிர்கள் பலி.. டெல்லியில் என்ன நடக்கிறது…?

By Swetha on ஆனி 6, 2026

Spread the love

டெல்லி மாநகரில் கடந்த சில ஆண்டுகளில் தீ விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும், பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த தீ விபத்துகளில் சிக்கி 4,403 பேர் காயமடைந்து உள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2019-ம் ஆண்டில் அனாஜ் மண்டி பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து உட்பட பல சம்பவங்கள் இதில் அடங்கும்.

இந்தத் தொடர் விபத்துகளின் வரிசையில், சமீபத்தில் டெல்லியின் மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 25 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று, டெல்லியின் விவேக் விஹார் மற்றும் பாலம் ஆகிய பகுதிகளிலும் அடுத்தடுத்து தீ விபத்துகள் ஏற்பட்டு, அங்கு தலா 9 பேர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்து உள்ளனர்.

   

டெல்லியில் தீ விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே இதுவரை 65 பேர் தீயில் கருகி பலியாகி உள்ளனர். கோடைக்காலம் மற்றும் இதர காரணங்களால் ஏற்படும் இத்தகைய தொடர் தீ விபத்துகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் டெல்லி அரசு தற்போது தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.