“செட்டில்மெண்ட் கேட்டு மிரட்டல்…” 60 வயது முதியவருக்கு நடந்த கொடூரம்… பகீர் பின்னணி…!!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் பழைய இரும்புக் கடை நடத்தி வந்த 60 வயது வனராஜ், தனது கடையில் ஓட்டுநராகப் பணியாற்றிய மாயாண்டி என்பவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயாண்டியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததால், அவரை வனராஜ் வேலையை விட்டு நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டி, தனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டு வனராஜை மிரட்டியுள்ளார். இதற்கு வனராஜ் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமடைந்த மாயாண்டி அங்கிருந்த இரும்புக் கம்பியால் வனராஜின் தலையில் ஓங்கித் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வனராஜ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த விக்ரமசிங்கபுரம் போலீசார், தலைமறைவாக இருந்த மாயாண்டியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் முதலாளியையே தொழிலாளி கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

விஜய் அமைச்சரவையில் காங்கிரஸிற்கு இடம்..? 2 அமைச்சர் பதவிகள் கேட்டுப் பிடிவாதம் – அதிரும் தமிழக அரசியல்..!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று…

18 minutes ago

ஒரே குடும்பம்… மூன்று கட்சிகள்… மூன்று எம்.எல்.ஏ-க்கள்.. லாட்டரி மார்ட்டின் குடும்பத்தின் மிரட்டல் அரசியல் சாதனை..!!

2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

32 minutes ago

தளபதி கோட்டைக்குச் செல்லும் நேரம் வந்தாச்சு..! “தேதி குறிச்சாச்சு” தமிழகமே எதிர்பார்க்கும் அந்த நிமிடம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழலில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா குறித்த…

46 minutes ago

கோட்டையில் க்ளைமாக்ஸ்..! ஸ்டாலின், உதயநிதி படங்கள் அகற்றம்… விஜய் வருகைக்காக தயார் செய்யப்படும் தலைமை செயலகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் சென்னை தலைமைச் செயலகத்தில்…

57 minutes ago

அதிர்ந்த தமிழக அரசியல்… ஆச்சரியப்பட்ட அஸ்வின்.. TVK-யின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இணைந்த கிரிக்கெட் உலகம்..!!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…

59 minutes ago

“விஜய்யை குறைத்து மதிப்பிடாதீங்க” அன்றே சொன்னேன்… இன்று நடக்கிறது… விஜய் குறித்து கிரிஷ் சோடங்கர் வெளியிட்ட பரபரப்பு கருத்து…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை குறைத்து மதிப்பிட வேண்டாம் என தாம் ஏற்கனவே கூறியிருந்ததை கிரிஷ் சோடங்கர் மீண்டும்…

1 மணத்தியாலம் ago