தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தவெக தலைவர் விஜய் விரைவில் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், அங்குள்ள அமைச்சர்களின் அறைகளை காலி செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தற்போதுள்ள திமுக அமைச்சர்கள் தங்களது அரசு அலுவலக அறைகளை காலி செய்து வரும் நிலையில், அங்கிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் தங்களது உடமைகளை எடுத்துச் செல்வதுடன், சுவர்களில் இருந்த தலைவர்களின் படங்களையும் கவனமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.
தலைமைச் செயலகம் மட்டுமின்றி, அடையாறில் உள்ள அமைச்சர்களின் அரசு இல்லங்களிலும் காலி செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புதிதாகப் பொறுப்பேற்க உள்ள விஜய் தலைமையிலான அமைச்சரவையின் அமைச்சர்கள் விரைவில் இந்த அறைகளையும் இல்லங்களையும் பயன்படுத்த உள்ளனர். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றத்தின் அடையாளமாக இந்தப் புகைப்படங்கள் அகற்றப்படும் நிகழ்வு பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று…
2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழலில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா குறித்த…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை குறைத்து மதிப்பிட வேண்டாம் என தாம் ஏற்கனவே கூறியிருந்ததை கிரிஷ் சோடங்கர் மீண்டும்…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பேட்டி…