2023-ல் பல படங்கள் வரிசையாக ரிலீசாகி வெற்றிப் படங்களாக அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து இந்தாண்டே வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த பெரிய ஹீரோக்களின் பல படங்கள் அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போயுள்ளது. அப்படி அடுத்தாண்டு திரையில் போட்டியிடவுள்ள பெரிய ஹீரோக்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
1. விடாமுயற்சி :
நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வலிமை, துணிவு படங்களுக்கு பிறகு பெரிய இடைவேளைக்கு பின் மகிழ்திருமேனியுடன் விடாமுயற்சி படத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் அஜித். விஜய்யின் லியோ படத்துடன் இப்படம் மோதும் என எதிர்பார்த்த நிலையில், சில பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பே தள்ளிப் போனது. 250கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் அடுத்தாண்டு மே மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title
2. விஜய் 68 :
அஜித்திற்கு பயங்கரமாக டஃப் கொடுத்து வருகிறார் விஜய். வாரிசு, லியோ என அடுத்தடுத்து ஒரே ஆண்டில் இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்தவர், தற்போது அடுத்தப் படத்திற்கும் தீயாய் இடை விடாமல் நடித்து வருகிறார். இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சயின்ஸ் பிக்சன் மற்றும் டைம் டிராவலை அடிப்படையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டு அல்லது தீபாவளியை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. கங்குவா :
ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்களை தொடர்ந்து சூர்யா நீண்ட இடைவேளையில் இருக்கிறார். கைவசம் நிறைய படங்கள் இருந்தாலும், இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்திற்காக கடினமாக உழைத்து வருகிறார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 10 மொழிகளில், ஹாலிவுட் தரத்திற்கு இப்படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஆகையால் இப்படம் அடுத்தவருடம் தீபாவளியை குறிவைத்து திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title
4. இந்தியன் 2 :
கொரோனாவுக்கு முன்பு ஆரம்பித்த இப்படத்தின் படப்பிடிப்பு, பல கட்ட பிரச்னைகளை சந்தித்து தற்போது தீவிரமடைந்து உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக இயக்குநர் சங்கர் தெலுங்கிற்கு சென்று ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தையே எடுத்து முடித்து விட்டார். தற்போது மீண்டும் இந்தியன் 2 பக்கம் வந்துள்ள அவர், கிராஃபிக்ஸ் பணிகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்டு இருப்பதாகவும், அடுத்தாண்டு நிச்சயம் படம் வெளியாகிவிடும் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.

#image_title
5. கேப்டன் மில்லர் :
திருச்சிற்றம்பலம் பட வெற்றிக்கு பிறகு தனுஷீன் கேப்டன் மில்லர் திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார் தனுஷ். 150 கோடி ரூபாய் செலவில் அக்காலத்திற்கு ஏற்றார் போல, காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படம் ஜனவரி 12-ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
6. தங்கலான் :
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 150 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் தங்கலான் படம், பழந்தமிழரின் வலியை உணர்வுபூர்வமாக இருக்கும் படமாக அமையவுள்ளது. இப்படத்தில் படமாக்கப்பட்ட காட்சிகள், பா.ரஞ்சித்திற்கு திருப்தி அளிக்காததால், மீண்டும் ரீசூட் பண்ண, இயக்குநரிடம் மாட்டிக் கொண்டாமோ என்ற கவலையில் விக்ரம் திரிவதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கப்படுகிறது.
