அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் விரைவில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு யூகங்கள் நிலவிவரும் சூழலில் இந்த தகவல் பற்றி டிடிவி தினகரன் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது, ஆண்டிபட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் தான் கண்டிப்பாக போட்டியிடுவார். நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் இந்த தொகுதியை விட்டுக் கொடுக்க போவதில்லை. எங்களுக்கு எந்தக் கூட்டணி வேண்டும் என்பதை நாங்களே முடிவு செய்வோம். சமீப காலமாகவே அதிமுக கூட்டணியில் நாங்கள் இணைய போவதாகவும் ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.
அது முற்றிலும் தவறானது. கூட்டணியே இன்னும் அமையாத போது தொகுதிகள் ஒதுக்கீடு என்பது வெறும் வதந்தி தான் என்று தெளிவுபடுத்தி உள்ளார். மேலும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விளங்குவதாக குறிப்பிட்ட தினகரன் கட்சியின் கட்டமைப்பு மிகவும் பலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். NDA கூட்டணியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் டிடிவி தினகரன் விலகிய நிலையில் தற்போது வரை எந்த கூட்டணியில் இணைய போகிறார் என்ற அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…