ஐயோ பாவம்… ஏசி அறையில் தூங்கிய குடும்பம்… கூரை இடிந்து 4 மாதக் குழந்தை உள்பட 6 பேர் கொடூர மரணம்…!

By Swetha on ஆவணி 7, 2026

Spread the love

பிரதாப்கரில் பெய்த கனமழை காரணமாக 100 ஆண்டுகள் பழமையான வீட்டின் கூரை புதன்கிழமை நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்றிரவு வெப்பமும் புழுக்கமும் அதிகமாக இருந்ததால், குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரும் ஏசி பொருத்தப்பட்ட ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 2 மணி அளவில், எதிர்பாராதவிதமாக வீட்டின் கூரை சரிந்து விழுந்ததில், அறையில் இருந்த அனைவரும் கட்டிடக் கழிவுகளுக்குள் புதையுண்டனர்.

   

இச்சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் பிரமோத் ஸ்ரீவஸ்தவா (60), அவரது மனைவி ரீதா (55), மகன் நிதின் (25), மருமகள் மாதூரி (23) மற்றும் பேரன்கள் மாதவ் (2), அத்விக் ஆகியோர் உயிரிழந்தனர். உயிருடன் மீட்கப்பட்ட பிரமோத்தின் மற்றொரு மகன் அமான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.