ஒப்பந்தச் செவிலியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..! 6 மாத கால மகப்பேறு விடுப்பு இனி ஊதியத்துடன்… தமிழக அரசு அதிரடி அரசாணை…!!

By Soundarya on பங்குனி 6, 2026

Spread the love

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தேர்வு செய்யப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, தகுதியுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு 6 மாதங்கள் (180 நாட்கள்) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அரசாணை வெளியீட்டின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஒப்பந்த செவிலியர்கள் பயன்பெறுவார்கள். இதுவரை மகப்பேறு விடுப்பு எடுக்கும் காலங்களில் ஊதியம் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த செவிலியர்களுக்கு, இந்த அறிவிப்பு மிகப்பெரிய நிம்மதியையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் வழங்கியுள்ளது. தங்களின் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையை செவிலியர் சங்கங்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.