இன்று காலையில் அமைச்சரவை மாற்றம்… மாலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் விஜய்…!

By Nanthini on வைகாசி 22, 2026

Spread the love

தமிழக அமைச்சரவையில் இன்று புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக 6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் ஒரு பகுதியாக, திருச்சி, பெரம்பலூர், தென்காசி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களுக்குப் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் (SP) நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றமும் மாவட்ட எஸ்பிக்கள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.