ஐயோ பாவம்… விநாயகர் சதுர்த்தியில் நேர்ந்த கோர விபத்து… கிணற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் துடிதுடித்து பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

By Swetha on புரட்டாதி 17, 2026

Spread the love

சங்காரெட்டி மாவட்டம், பட்டான்செரு மண்டலத்திற்கு உட்பட்ட இந்திரேசம் நகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பெத்த கஞ்சர்லா கிராமம். இக்கிராமத்தில் உள்ள சிரிஷா ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைப்பதற்காக உற்சாகத்துடன் சென்றுள்ளனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அருகே இருந்த திறந்தவெளி கிணற்றில் ஆறு மாணவர்கள் தவறி விழுந்தனர். இந்தத் திடீர் விபத்தால் அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் காப்பாற்ற முயன்றும் இயலாமல் போகவே, விசர்ஜன நிகழ்வு சோகத்தில் முடிந்தது. நீரில் மூழ்கிய ஆறு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

   

https://twitter.com/TeluguScribe/status/2100236086425628754/video/1

   

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்புக் குழுவினரின் உதவியோடு மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே காப்பகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் பலியான இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.