Categories: சினிமா

ஸ்ரீவித்யா முதல், சிம்ரன் வரை.. சர்ச்சைகள் நிறைந்த கமலின் காதல் வாழ்க்கை.. கமலுடன் வாழ்ந்த நடிகைகள் யார் யார் தெரியுமா..?

Spread the love

இன்று நடிகர் கமல்ஹாசன் தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே கமல்ஹாசனை காதல் இளவரசன் என்றுதான் அழைப்பது வழக்கம். ஏனென்றால் அவர் சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் காதல் கலைகளில், தான் சகலகலா வல்லவன் என நிரூபித்தவர் அவரது சினிமா வாழ்க்கையில் 6 பெண்களுடன் அவர் காதலனாக வாழ்ந்திருக்கிறார்.

அதில் இருவருக்கு தாலி கட்டி ஒரு கணவனாக- மனைவியுடன் குடும்பம் நடத்தி இருக்கிறார். ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இரு பெண் குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார். அவரது காதல் வாழ்க்கை குறித்தும், பெண்களின் உறவு குறித்தும் நிறைய தகவல்கள் இருக்கின்றன.

ஆரம்ப காலத்தில் நடன இயக்குநராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து, அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்த போது, நடிகை ஸ்ரீவித்யாவுடன் கமலுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. 20 வயது கமலை, 22 வயது ஸ்ரீவித்யா விழுந்து விழுந்து காதலித்து இருக்கிறார். ஆனால், அவர்களது காதல் நிறைவேறவில்லை. இறுதி காலத்தில், கேரளாவில் நோய்வாய்பட்டு இருந்த ஸ்ரீவித்யாவை நேரில் சென்று நலம் விசாரித்தார்

கமல். அடுத்து, இவரது வாழ்வில் வந்தவர் நடனக்கலைஞர் வாணி கணபதி. பேரழகியாக இருந்த இவரை, கமல் காதலித்து மணம் புரிந்தார். ஆனால், 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், இவரை பிரிந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து 3வதாக குஜராத்தி நடிகை சரிகாவை, காதல் மணம் புரிந்தார் கமல். அவருக்கு பிறந்த குழந்தைகள்தான் ஸ்ருதி, அக்‌ஷரா.

இந்நிலையில், சரிகாவுடன் வாழ்ந்த காலத்தில் கவுதமி உடன் கமல் இணைந்த நடித்த படங்களில் இருவருக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அதை சரிகா கண்டித்த நிலையில், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதால் சரிகா, கமலை விட்டு நிரந்தரமாக பிரிந்தார். இந்நிலையில், பம்மல் கே சம்மந்தம், பஞ்ச தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்த போது சிம்ரனுடன் கமலுக்கு நெருக்கம் உண்டானது. ஆனால், 22 வயது மூத்தவர் கமல் என்பதால், சிம்ரன் ஒரு கட்டத்தில் விலகி, வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கவுதமி மீது கரிசனம் காட்டிய கமல், அவருடன் தாலி கட்டாமலேயே கணவன், மனைவி போல சேர்ந்து வாழ்ந்தார். 16 ஆண்டுகளுக்கு மேல் இந்த உறவு நீடித்தது. இந்நிலையில், பூஜாகுமாருடன் ஏற்பட்ட பழக்கம், இறுக்கமான நட்பாக உருவாக, கவுதமியையும் பிரிந்த கமல், இப்போது முரட்டு சிங்கிளாக இருக்கிறார். ஆனால், நடிகை பூஜாகுமாருடன் அவரது நட்பு தொடர்வதாக கூறப்படுகிறது.

admin

Recent Posts

மிரண்டு போன த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள்… வெள்ளை காகிதத்தில் கையெழுத்து…? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…

16 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! வேகமாக வந்த எக்பிரஸ்… தண்டவாளத்தில் சரிந்த மண், மின்கம்பம்… சிக்னல் காட்டி ரயிலை நிறுத்திய ஊழியர்கள்… பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி - ஹவுரா ரயில் வழித்தடத்தில் கட்டுமானப் பணிகளின் போது திடீரென மண்…

29 minutes ago

மகளிர் உரிமை தொகை…! அரசின் இரட்டிப்பு சர்ப்ரைஸ்…! இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் கோடிக்கணக்கான இல்லத்தரசிகளுக்கு அரசு தரப்பில் இரட்டிப்பு…

36 minutes ago

50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து… தலைக்குப்புற கவிழ்ந்து 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

1 மணத்தியாலம் ago

பொம்மையை தாயாக நினைத்து வளர்ந்த குரங்கு… இன்று மற்ற குட்டிகளுக்கு பாதுகாவலனாக மாறிய அதிசயம்… கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…

1 மணத்தியாலம் ago

“அந்த மனசு தான் சார் கடவுள்…” குழந்தை இழுத்ததில் அறுந்து விழுந்த 1.5 பவுன் தங்க செயின்…! சுதாரித்து எடுத்த தூய்மை பணியாளர்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கீழே கிடந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான…

1 மணத்தியாலம் ago