கோவை மாநகராட்சியில் கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணியின் கட்டுப்பாட்டின் கீழ் 54 இளநிலை உதவியாளர்கள் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதாகக் கடுமையான புகார்கள் எழுந்தன. நாளிதழ்களில் எவ்வித விளம்பரமும் செய்யாமல், இடஒதுக்கீடு மற்றும் சீனியாரிட்டி விதிகளை முற்றிலுமாகப் புறக்கணித்து, ஒரே நாளில் நேர்காணல் நடத்தி இரவோடு இரவாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் செந்தில்குமார் அமர்வு, தேர்வு நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாததால் “புறவாசல் வழியாக வந்தவர்கள் புறவாசல் வழியாகத்தான் செல்ல வேண்டும்” என்று கூறி, 54 பேரின் பணி நியமன ஆணைகளையும் ரத்து செய்ய உத்தரவிட்டது. மேலும், சட்டவிரோத நியமனத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியான நபர்களைக் கொண்டு அந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து இளநிலை உதவியாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விஸ்வநாதன் மற்றும் அருண் பாலி அமர்வு, ஒரே நாளில் நேர்காணல் நடத்தி பணி ஆணை வழங்கியது அப்பட்டமான விதிமீறல் என்பதைச் சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
நீதிமன்றங்களின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் ககன்தீப் சிங் அறிவுறுத்தலின்படி, கோவை மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா 54 இளநிலை உதவியாளர்களையும் பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நியாயம் கிடைத்ததைத் தொடர்ந்து, வழக்கு தொடர்ந்த ஊழியர்களுக்குக் கருணை அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், காலியான பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு முறையாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே நடக்கும் கருத்து மோதல்களும் அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப்…
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…
'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…
சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…