மத்திய அரசின் கீழ் இயங்கும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள கரன்சி நோட் பிரஸ் (CNP) நிறுவனத்தில், ஜூனியர் டெக்னீஷியன், சூப்பர்வைசர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 534 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஜூனியர் டெக்னீஷியன் பிரிவில் 430 இடங்கள் உள்ளன. ITI, டிப்ளமோ, பி.இ/பி.டெக், பி.எஸ்சி மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பதவிக்கு ஏற்ப 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும், மேலும் அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படுகின்றன.
தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் தேவைப்படும் பதவிகளுக்கு தட்டச்சுத் தேர்வுகள் நடத்தப்படும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் ₹200 ஆகவும், மற்ற பிரிவினருக்கு ₹1000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் வரும் ஜூன் அல்லது ஜூலை 2026 மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://cnpnashik.spmcil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏப்ரல் 20, 2026 முதல் மே 19, 2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் முறையிலேயே செலுத்த வேண்டும். மத்திய அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும், கூடுதல் விபரங்களுக்கு இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
