500 கிலோ மட்டன் கறிவிருந்து… திரண்ட 5000 மக்கள்… சிவகங்கையில் அரங்கேறிய சம்பவம்… அந்த விஷயம் என்ன தெரியுமா?…

Spread the love

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள பூலாம்பட்டி கிராமம், மத நல்லிணக்கத்திற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. இங்குள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் இணைந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியக் கறி விருந்து விழாவை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற விருந்தில் பூலாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு ஒரே இடத்தில் அமர்ந்து உணவருந்தினர்.

இந்த விழாவின் மிக முக்கிய நெகிழ்ச்சியான நிகழ்வாக, இந்துக்களும் கிறிஸ்தவர்களும் சர்க்கரை, பேரிச்சம்பழம், மல்லிகைப்பூ மற்றும் ஊதுபத்தி போன்ற பொருட்களைச் சீர்வரிசையாகக் கொண்டு வந்து பள்ளிவாசலில் வழங்கி வழிபாடு நடத்தினர். பின்னர் அப்பொருட்கள் பொதுமக்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்பட்டன. முதல் நாள் பள்ளிவாசலில் விருந்து உபசரிப்பு முடிந்ததைத் தொடர்ந்து, அடுத்ததாகக் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலிலும் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து சந்தன காப்பு அலங்காரம் உள்ளிட்ட வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் மனங்கள் ஒன்றாக இணைந்து வாழும் பூலாம்பட்டி மக்களின் இந்தத் தலைமுறை தலைமுறையான ஒற்றுமை பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. விழாவில் கலந்துகொண்ட கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் இவ்ஒற்றுமையைப் போற்றிய நிலையில், தற்போது இந்த மத நல்லிணக்க விழாவின் புகைப்படங்களும் காணொளிகளும் இணையதளங்களில் பரவி நெட்டிசன்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகின்றன.

Swetha

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

5 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

5 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

5 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

5 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

5 மணத்தியாலங்கள் ago