சினிமாத்துறை வளர்ந்து வரும் சூழலில், ஆண்டுக்கு பல படங்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், இந்தாண்டு வந்த படங்களில் நாம் பெரிதும் எதிர்பார்த்தும், சரியாக செல்லாத படங்கள் என்னென்னவென இங்கு பார்க்கலாம்..
1. LGM.. கிரிக்கெட்டில் கொடி கட்டி பறந்து வரும் எம்.எஸ் தோனி, ஐபிஎல்லில் மட்டுமே விளையாண்டு வரும் நிலையில், மற்ற வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், அடுத்ததாக சினிமாவில் அடியெடுத்து வைக்கப் போகிறார் என்ற செய்தி பரவியதால், அவரது கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருந்தனர். தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தனியார் கம்பெனி தொடங்கி தமிழில் முதன் முதலாக எல்.ஜி.எம் என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்க தயாரானார். LETS GET MARRIED என்ற விரிவாக்கத்தின் சுருக்கமே எல்.ஜி.எம். யக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா உட்பட பலர் நடிப்பில் உருவான இப்படம் இந்தாண்டு ஜூலை மாதம் வெளியானது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்று மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர் எனலாம்..

#image_title
2. சந்திரமுகி-2.. 2005-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, நாசர், ஜோதிகா, வடிவேலு உட்பட பலர் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளபிய திரைப்படம் சந்திரமுகி. வாசு இயக்கத்தில் உருவாகி இருந்த இந்தப் படம் வசூலை வாரி குவித்தது எனலாம். 12 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கத் தொடங்கினார் இயக்குநர் வாசு. சூப்பர் ஸ்டாரின் ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிப்பில் உருவான இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. சந்திரமுகியாக கங்கனா மேக்கப்பில் கலக்கினாலும், நடிப்பில் அவ்வளவாக பேசப்படவில்லை.

#image_title
3. மைக்கேல்… ஒரு காலகட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி இல்லாத படங்களே இல்லை என்ற அளவு ரவுண்டு கட்டி நடித்து வந்தார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என வளைத்து வளைத்து நடித்து வந்தார். அந்த வகையில் இந்தாண்டு விஜய்சேதுபதி, வரலட்சுமி, சுந்தீப் கிஷன், திவ்யான்ஷா கவுசிக் உட்பட பலர் நடிப்பில் இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தெலுங்கில் தயாராகி தமிழில் டப் செய்து வெளியான இப்படம் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு மேலும் ஏமாற்றத்தை கொடுத்தது.

#image_title
4. ஜப்பான்.. பொதுவாக அனைத்து ஹீரோக்களுக்கும் அவர்களது 25, 50, 75 மற்றும் 100-வது படங்கள் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். பெரும்பாலும் பல நடிகர்களுக்கு இந்த படங்கள் வெற்றியாக அமைவதில்லை. அந்த வரிசையில் இணைந்தார் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர், 25-வது படமாக ஜப்பான் படத்தில் நடிக்கத்துவங்கினார்.. தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், மிகப்பெரிய பிளாப் ஆனது.

#image_title
5. இறைவன்.. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயந்தாரா நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. வசூலிலும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது இறைவன் திரைப்படம்.

#image_title
இப்படங்கள் தவிர யோகிபாபுவின் லக்கி மேன், விஜய் ஆண்டனியின் கொலை, சந்தானத்தின் கிக், உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
