தமிழக சட்டமன்றக் களத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் தனது ஆட்சிப் பலத்தை மேலும் வலுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் கூட்டணிக் கட்சிகளான இடதுசாரிகள் மற்றும் விசிகவுடன் கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ள சூழலில், அரசுக்கு வழங்கப்படும் ஆதரவு எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. இந்த அரசியல் நெருக்கடியைச் சமாளிக்கவும், சட்டமன்றத்தில் சொந்த பலத்துடன் தனிப்பெரும்பான்மையை நிலைநாட்டவும் தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் அதிமுகவின் முக்கிய முகங்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், டி. ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அனுபவமிக்க இந்த நிர்வாகிகளுக்கு உடனடி அங்கீகாரமாகத் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வழங்கி தவெக தலைமை கௌரவித்தது. மேலும், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்த பின்னரே கட்சியில் இணைந்ததால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பால் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் போனது. இது அதிமுகவில் உள்ள மற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கும் புதிய துணிச்சலை அளித்துள்ளது.
தவெகவின் இந்தத் தீவிர விரிவாக்கம் வெறும் அரசியல் காய்களை நகர்த்துவது மட்டுமல்லாமல், சட்டமன்றத்தில் தங்களது சுய பலத்தை உறுதிப்படுத்தும் உத்தியாகவே பார்க்கப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தியால் ஏற்படும் ஆட்சி அபாயங்களைத் தவிர்க்கவும், வரும் இடைத்தேர்தல்களில் நேரடி வெற்றியைப் பதிவு செய்து தனித்து நிற்கும் வல்லமையைப் பெறவும் விஜய் தலைமையிலான தவெக விரும்புகிறது. இதன்காரணமாகவே, தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட மேலும் 5 அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பே களப்பணியைத் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…