BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

By Devi Ramu on ஆவணி 5, 2026

Spread the love

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் ‘வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்’ என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பெண்களுக்கு 100 சதவீதம் முழு மானியத்தில் முற்றிலும் இலவசமாக 5 ஆடுகள் வழங்கப்படும். கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனச் சமூகத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த 30,000 நபர்கள் இத்திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயனடைய உள்ளனர்.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களைத் தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகத் தமிழக அரசு சார்பில் ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி இலவச அறிவிப்பானது கிராமப்புறப் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது