Connect with us

இர்பான் முதல் விடிவி கணேஷ் வரை… CWC சீசன் 5 ன் 5 குக்குகள் இவர்கள் தானா…? வெளியான அசத்தல் ப்ரோமோ…

CINEMA

இர்பான் முதல் விடிவி கணேஷ் வரை… CWC சீசன் 5 ன் 5 குக்குகள் இவர்கள் தானா…? வெளியான அசத்தல் ப்ரோமோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’.  இந்த ஷோவின் முக்கிய நோக்கம் சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து கலகலப்பாக கொடுப்பதே ஆகும்.

கொரோனா லாக் டவுன்  சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பலரது மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்பொழுது இந்த நிகழ்ச்சி 4 சீசன்களை நிறைவு செய்து  5வது சீசன் தற்பொழுது தொடங்க உள்ளது. மேலும் இந்த 5-வது சீசன் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி தொடங்க உள்ளது.

   

 

தற்பொழுது  ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இந்நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த நான்கு சீசன்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

ஆனால் இம்முறை வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதால் அவருக்கு பதிலாக புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜை களமிறக்கி உள்ளனர்.

அதேபோல் இம்முறைய சமையல் திறமையை வெளிப்படுத்த களமிறங்கும் குக்குகள் குறித்த விவரமும் தற்பொழுது ப்ரோமோவாக விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

அதில் கசிந்துள்ளது. விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, சீரியல் நடிகர் வசந்த் வசி , பிரபல யூ டியூபர் இர்பான் , விடிவி கணேஷ், சீரியல் நடிகை சுஜிதா போன்றோர் கலந்து கொள்ள இருப்பதாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதோ அந்த வீடியோ….

Continue Reading
To Top