தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான தொகுதிப் பங்கீட்டு உடன்படிக்கை சற்றுமுன் கையெழுத்தானது. கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அக்கட்சிக்கு ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை தளி மற்றும் பவானிசாகர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இந்தத் தேர்தலில் தொகுதிகள் குறைக்கப்பட்டது அக்கட்சியினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
